ஒரு பரதேசியின் பயணம் 6 – சபரிமலை.

ரு பரதேசியின் பயணம்  6 – சபரிமலை.
காலையில் பம்பா நதிக்கரையில் 

நான்காவது முறையாக சபரிமலை செல்லும் வாய்ப்பு இந்தமுறை மணிஜி மூலமாகக் கிட்டியது. மாலை போட்டு, விரதம் இருந்து சென்ற 18ம் தேதி மதியம் வைகை எக்ஸ்ப்ரஸில் நான், மணிஜி, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் கிளம்பினோம். சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில், அங்கிருந்து பேரூந்து மூலம் குமுளி, அங்கிருந்து பம்பா சென்று மலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் திட்டம். 
பம்பா பேரூந்து நிலையம்.


20 நாட்களுக்கு முன்பாக, கேரள போலீஸால் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் க்யூ முறை பற்றி வாசு சொன்னார். அந்தத் தளத்தில் 19ம் தேதி காலை 5 மணி வரிசைக்காக முன்பதிவு செய்திருந்தோம்.

தகவல் நிலையங்களும், அப்பல்லோ சிகிச்சை மையமும்

ரு 33kb  அளவு வருமாறு சமீபத்திய புகைப்படம் இணைத்து, நமது விவரங்களுடன் அந்தத் தளத்தில் பதிவு செய்தால் பார்கோட் கொண்ட ஒரு கூப்பனை அந்த இணையதளம் நமது மின்னஞ்சலுக்கு பிடிஎஃப் பைலாக அனுப்பிவைக்கிறது.  இதை ப்ரிண்டவுட் எடுத்துவைத்துக்கொண்டு பம்பாவில் அதற்கென இருக்கும் கவுண்டரில் காண்பித்து, ஒரு சாப்பா வாங்கிக்கொள்ளவேண்டும்.

மரக்கூட்டம் – விர்ச்சுவல் க்யூ பிரியும் இடம்.

ரங்குத்தி தாண்டி மரக்கூட்டம் அருகே இரு வழியாகப் பிரித்து இடது புறம் கூப்பன் சாமிகளையும், வலதுபுறம் சாதா சாமிகளையும் அனுப்பி வைக்கிறார்கள்.

விர்ச்சுவல் க்யூ சாமிகளும், சாதா சாமிகளும்

ன்னிதாதத்திற்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய ஷெட்டில் இந்தக் கூட்டத்தை தனித்தனியே வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களாக படியேற்றி பதினெட்டாம் படிக்கு அனுப்புகிறார்கள், ஒரு குழு தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி முடித்த உடன் அடுத்த குழு அனுப்பப் படுகிறது, இதனால் காலதாமதமானாலும் நெரிசலின்றி அனைவரும் பதினெட்டுப் படி ஏறி சாமிதரிசனம் செய்ய முடிகிறது. இந்த கூப்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எங்களுக்கு மிச்சமானது, 7.30க்கு பம்பையிலிருந்து ஏறத்துவங்கி 10.50க்கெல்லாம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிட்டோம். அதே நேரம் இந்த கூப்பன் இல்லாமல் ஏறியவர்கள் 4மணிக்குப் பிறகே தரிசனம் காணமுடிந்தாக கூறக்கேட்டோம். 

பரிமலை சில வருடங்களிலேயே மிகப்பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது,.

ம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,

சேகரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் எமன்கள்

பரியில் குமியும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் இன்னும் பிறவற்றை உடனுக்குடன் பம்பைக்கு கொண்டு செல்வதற்கும், பம்பையிலிருந்து சபரிக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பல ட்ராக்டர்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன.

அவசர சிகிச்சைக்காக

சுடுவெள்ளம்
ஓக்ஸிஜன் பார்லர்

ம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம் முழுக்க பல ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்துள்ளார்கள், வழிஎங்கும் சூடாக்கப்பட்டு பதிமுகம் கலந்த சிகப்புநிற குடிநீர் தாராளமாக விநியோகம் செய்கிறார்கள், இருதயப் பரிசோதனைக்கூடங்களும், அவசரசிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன அதை நிமிடத்திற்கு ஒருதரம் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கிறார்கள்.

 ப்படியும் மயங்கிய ஓரிரு பக்தர்களை உடனுக்குடன் ஸ்ட்ரெச்சரில் முதலுதவிக்காக அழைத்துச் சென்றதையும் கண்டோம். தெளிவாக உடல்நிலை பரிசோதித்துப் பின்னரே மலை ஏறுங்கள் என்று அனைத்து மொழியிலும் அறிவித்தும் சிலர் இவ்வாறு மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். பக்தி தாண்டி மலைஏற்றம் என்பது மனதும் உடலும் சம்பந்தப்பட்டது.

சரங்குத்தி
டோலி சார், டோலி

த்தனைக்கும் அருமையாக பாதை போட்டு வழிநெடுக எல்லா வசதிகள் கிடைத்தும் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் கொடுமை. 

நீலிமலையிலிருந்து ஒரு பார்வை

20வருடங்களுக்கு முன் நான் கண்ட காடு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல், மலையாளிகள் காட்டின்மீது வைத்துள்ள கொஞ்ச நஞ்சப் ப்ரேமை வாழ்க. 

நினைவில் காடுள்ள மரம்

19அதிகாலை பம்பையை அடைந்து குளித்து மலைஏறி தரிசனம் செய்து, மாலை 4 மணிவாக்கில் பம்பா பஸ்ஸ்டாண்ட் வந்தோம், சென்னைக்கான தமிழ்நாடு அரசுப் பேரூந்து ரூ.750/- மட்டும் வாங்கிக்கொண்டு சென்னைக்கு அல்ட்ராடீலக்ஸ் என்னும் மலைப்பாதைக்கு ஒவ்வாத மிகநீண்ட பேரூந்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுனரிடம் பிட்டைப்போட்டதிலிருந்து அந்தப் பாதைக்கே புதியவர்கள், சீசனுக்காக ஓட்ட வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது, சுமாரான வேகம், திருப்பங்களில் தடுமாற்றம் என்று தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக இறங்கும்போது குமுளிமலைப்பாதையில் ஒரு திருப்பத்தில் பின் சக்கரம் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏற வண்டியின் பின்புறம் அடிபட்டு ஒருவழியாக தடவித்தடவி இறங்கினோம். 

ஓங்கி உலகளந்த..

மாலை 5 மணிக்கு வண்டி எடுத்து 6.30க்கெல்லாம் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நடத்துனர் கூறியவுடன் கேட்டால் கிடைக்கும் சங்க உறுப்பினரான மணிஜி தட்டிக்கேட்க ஆரம்பித்துவிட்டார், ஒத்தாசைக்கு நானும் TNSTC வெப்சைட்டை ஓப்பன் செய்து புகார் அளிக்க நம்பரைத் தேடினேன், இதைக் கண்ட நடத்துனர் உடனே, சாமி நீங்க எங்க சொல்றீங்களோ அங்க நிப்பாட்டறேன் என்று கூறி, சிப்ஸ் வாங்க குமுளியிலும் சாப்பாட்டிற்காக வழியில் ஓர் இடத்திலும் நிறுத்தி அதிகாலை 3 மணி சுமாருக்கு திண்டுக்கல் கொண்டுவந்து சேர்த்தார். ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்) 
நீரும் ஞானும் பின்னே பம்பாவும்..

ப்படியும் அந்தப் பேரூந்து பொங்கலுக்குள் சென்னை சென்றுவிடும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மூவரும் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் சிறிது சிரமப்பரிகாரம் செய்துகொண்டு காலை 7.30 க்கு மீண்டும் வைகையைப் பிடித்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.

பின்குறிப்பு:

விர்ச்சுவல் க்யூ ஒரு நல்ல திட்டம். மலைக்குச் செல்பவர்கள் அவசியம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.
விவரங்களுக்கு:
 http://www.sabarimalaq.com/
மலையாள மனோரமா சார்பில் சபரிமலை பற்றி ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டு இருக்கிறார்கள். பார்க்கிங் வசதி, முக்கிய தொலைபேசி எண்கள், வெதர், கூட்ட அளவு, கோவில் நடை திறக்கும்/பூஜா நேரங்கள் போன்றவைகளுடன் சபரிமலை செய்திகளும் அடங்கி இருக்கிறது, சிறப்பான முயற்சி,

மிழ்நாடு அரசுப் பேரூந்து நிருவனத்தின் வெப்பேஜில் குறிப்பிட்ட தொடர்பு எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை என்றே வருகிறது. பேரூந்திலும் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்யும் புகார் எண்களை கையில் வைத்துக்கொண்டால், அராஜகம் செய்யும் நடத்துனர், ஓட்டுனரிடமிருந்து தப்பிக்கலாம். சும்மா இல்லை சார், சொளையாக 750 ரூபாய் வாங்கிக்கொண்டு 6.30க்கு இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளுங்கள் அல்லது பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் வேறு எங்கும் நிற்கச் சொல்லி எங்களுக்கு ஆர்டரில்லை என்று கூசாமல் ஓசி பரொட்டா பார்சல் வாங்கிக்கொண்டு சொல்கிறார்கள்.

முடிந்தால் ரயிலிலேயே முன்பதிவு செய்து சென்று வருவது உத்தமம். 
கேரள அரசாங்கத்தின் சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகு மலையில் உணவு வகைகள் ஓரளவு நன்றாகவே கிடைக்கிறது. 
நன்றி, வணக்கம்.

சன்னிதானம்.
பதினெட்டாம் படி
அப்பம், அரவணை பிரசாதம் ஸ்டால்கள்

சாமியே சரணமையப்பா. :))
Advertisements

10 thoughts on “ஒரு பரதேசியின் பயணம் 6 – சபரிமலை.

 1. பலாபற்றையின் கட்டுரையை படித்து, இங்கிருந்தே சாமிதரிசனம் செய்துகொண்டேன்.

 2. உங்ககிட்டே ஒரே பிரச்சனை படங்களை பெரிதாக எப்போதும் போட மாட்டீங்க.நுணுக்கிட்டு பார்க்கனும்.அப்புறம் திருப்பூரில் இருந்து சென்று வந்த நண்பர் (அவரும் மலையாளி தான்) சொன்ன தகவல் சரியான்னு பாருங்க.கூட்டத்தினர் படிகளில் மேலே ஏறும் போது கருணையில்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் தள்ளு தள்ளு என்று தள்ளி நகர்த்தி விடுகின்றார்கள். இஇந்த முறை அதுவும் அதிகம்.வயதானவர்கள் இந்த முறையினால் ரொம்ப அவதிப்படுகின்றார்கள் என்றார்.

 3. நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க, சந்தோஷம்!

 4. Shankar G says:

  கும்மாச்சி & சிவா – நன்றி :))ஜோதிஜி: படத்த க்ளிக் பண்ணினா பெரிசா தெரியுமே?அந்தப் படி மிகவும் செங்குத்தாக இருக்கும். நானே இரண்டுமுறை பின்னால் விழ இருந்து போலீஸால் தாங்கிப் பிடித்து ஏற்றப்பட்டேன். அங்கே விழுந்தால் பின்னால் ஏறுபவர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலாகும், போக எல்லோருக்குமே அந்தப் படிகள் ஒவ்வொன்றையும் மூன்றுமுறை தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஏறவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது, யோசித்துப்பாருங்கள், வெளியில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? இப்படி ஏற்றிவிட்டே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 5. Shankar G says:

  திவா சார் – நன்றி 🙂

 6. ஷங்கர்ஜி,நீங்க பெரிய பக்தி"மான்" போல இருக்கே, மலை,மலையா ஏறி இறங்குறிங்க, அடுத்து என்ன இமயமலையா? ஒரு அண்ட்ராயர் போன வச்சுக்கிட்டு போற இடத்தில எல்லாம் அழிச்சாட்டியம் செய்றிங்க போல , எப்படியோ நடத்துனர் அதற்கே பயந்து வழிக்கு வந்துட்டாரே.மலையேறின அலுப்புத்தீற தீர்த்தயாத்திரை போயிருப்பிங்களே :-))

 7. உண்மையிலே ஐயப்ப பக்தர்கள் நன்றி சொல்லவேண்டியது மலையாள tv சேனல்களுக்குதான், அவர்கள்தான் காடு , மலை என்று நடந்து, பக்தர்கள் எப்படியெல்லாம் கஷ்டபடுகிறார்கள் மற்றும் வெளி மாநில பக்தர்களை எப்படியெல்லாம் அங்குள்ள வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் என்று எழுதி கேரள அரசை உடனே நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார்கள்.

 8. Rangs says:

  //ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்) //Still laughing!

 9. Shankar G says:

  @வவ்வால்நன்றி :)நீங்க பெரிய பக்தி"மான்" போல இருக்கே, மலை,மலையா ஏறி இறங்குறிங்க, அடுத்து என்ன இமயமலையா? //இல்லை அந்தமான் :)@அஜீம்பாஷா:ஆமாங்க. உண்மைதான், எதையும் மழுப்பாமல் பதிவு செய்கிறார்கள். பாராட்டத்தகுந்த விஷயம்.@ரங்ஸ் : :)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: